---------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi  Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக 
----------------------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பான கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் கட்டபட்ட ஒரு மிகப்பிரமாண்டமான ஒரு கட்டிடம் ஆகும். அது கடந்தகால போர் சூழ்நிலைகள் காரணமாக சிதைவடைந்து காணப்பட்டது. ஆனாலும் இந்த கோட்டையானது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடமாகும்...... இன்றைய சுமுகமான காலகட்டத்தில் யாழ்ப்பான கோட்டை வடக்கின் வசந்தம் திடத்தின் கீழ புனரமைக்கப்பட்டு வருகின்றதை காணலாம். 



 

 

  

  

Share/Bookmark





Facebook அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வசதி இந்த Chat ஆகும்.

இந்த வசதி தற்காலத்தில் அறிமுகப்படுத்திய ஒரு  திறனாகும்
இதன் மூலம் நாங்கள் offline இல் இருக்கும் friends க்கும் தகவல் அனுப்பும் வசதியை முகப்புதகம் அறிமுகப்படுத்தி
உள்ளது குறிப்பிடத்தக்கது. 






ஆனாலும் முந்தய chat வாசிகளுக்கு இது சிரமமாகவே உள்ளது. 
உதாரணமாக நானும் இதில் உள்ளடன்குவேன். ஏன் என்றால் இது குறைந்த Internet Speed இல் பாவிப்பது கடினமாகும். 
                                   பதிவு-S.Tharsan
Share/Bookmark





சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த சிறிய அலுவலகங்களை ஒரு வசதியான பெரிய அலுவலகமொன்றிற்கு நகர்த்தியிருந்தது.

குறித்த அலுவலகத்தின் பரப்பளவு 150,000 சதுர அடிகளாகும். இவ் அலுவலகத்தின் அலங்கார வடிவமைப்புக்களை ஸ்டூடியோ ஓ+ஏ என்ற நிறுவனமே மேற்கொண்டது.

இதற்காக அந்நிறுவனம் பேஸ்புக் ஊழியர்களிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்திருந்தது.

இங்கு ஊழியகளுக்கு இலவச உணவு, மென்பானங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் பல மைக்ரோ சமயலறைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஊழியர்களை எந்நேரமும் புத்துணர்வுடன் வைப்பதற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்.முனீஸ்வரன் வீதியில் வியாபார நடவடிக்கைகள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றன. 

குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து வந்த  வியாபாரிகள் நடைபாதை வியாபார நடவடிக்கைகளில்  அதிகமாக ஈடுபட்டனர்.

மாலை வேளைகளில் வீரசிங்கம் மண்டபத்தையண்டிய பகுதிகளிலும் முனிஸ்வரன் வீதியை அண்டிய வியாபார பகுதிகளிலும் பொருட்களை கொள்வனவு செய்யும்  மக்கள் கூட்டம்  அதிகமாக காணப்பட்டனர்.







Share/Bookmark

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் IPL போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்பதைக் கைவிட்டுவிட்டு மே மாதம் 5ம் திகதிக்கு முன் நாடு திரும்ப வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். 

மே மாதம் 14ம் திகதி ஆரம்பமாகும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான ஆயத்தங்களில் பங்கேற்கும் வகையிலேயே இலங்கை வீரர்கள் நாடு திரும்புமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

இந்த விடயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் பேசித் தீர்வு காணப்படும் என்று இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஏனைய சுற்றுலாக்களை விட நாட்டுக்காகப் பங்கேற்கும் சுற்றுலாக்களிலேயே முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் விரைவில் சுற்று நிருபம் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. 

இலங்கை வீரர்களை நாடு திரும்புமாறு கேட்டுள்ளமை இலங்கை இந்திய கிரிக்கெட் அதிகாரிகளுக்கிடையில் சர்ச்சைக்குரிய நிலையைத் தோற்றுவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது


Share/Bookmark

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத் திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது. 

மிகமிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலைவுகள் ‘ஒளி ஆண்டு’ அடிப்படையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது, கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ. வேகத்தில் போனால்கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.. அவ்ளோ பெரிசு. 

இந்த கேலக்சி ‘ஏரியாவில்’ பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத, மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெ ரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா) அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.

‘‘கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன. 54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக்கக் கூடும். 

கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார். மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரியவரும்.


Share/Bookmark

GSM and CDMA– Global System for Mobile Communication and Code Division Multiple Access இவை இரண்டும் மொபைல் போன் தொழில் நுட்பத்தில் இரண்டு வகை. 

மொபைல் சேவைக்கென தொழில் நுட்பத்தினை வழங்கி வந்த ஒரு சில நிறுவனங்கள் 1987ல் GSM அமைப்பை உருவாக்கி, சிறப்பான சேவை தர முயற்சிகளை எடுத்தன. அதே நேரத்தில் அமெரிக்காவில் குவால்காம் நிறுவனம் CDMA தொழில் நுட்பத்தினை மொபைல் போனுக்குப் பயன்படுத்தியது. 

உலகின் அனைத்து நாடுகளிலும் இரண்டு தொழில் நுட்பமும் பயன் படுத்தப்படுகின்றன. மொபைல் போன் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு, போன் கவரேஜ் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். 

சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் சிறந்தது. சிறப்பாக தொடர்பு தரும் என்று கூறுவார்கள். ஆனால் உலக அளவில் அதிகமான நாடுகளிலும், மக்களாலும் பயன்படுத்தப்படுவது ஜி.எஸ்.எம். வகைதான்.
Share/Bookmark



Tharsan

Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live

Mp3 Player

எனது படைப்பு

toolbar powered by Tharsan Live

FOLLOWERS

Connect With Face Book

Tharsan Live 

இது நம்ம நாட்டு நேரம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Tharsan Logo

[LOGO2+copy.jpg]

என்னை பற்றி

Tharsan Sritharan

> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk

வலைப்பதிவு காப்பகம்

ஜனாத்தணன்

*****சகல விதமான Graphics வேலைகளுக்கும் நாட  வேண்டிய இடம் MSDC T.ஜனாத்தணன் மணிப்பாய் வீதி யாழ்ப்பாணம்.*****

வலையை தெரியப்படுத்துங்கள்

Share |

வந்ததுக்கு நன்றி

நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி. தர்சன் 

Lanka Sri Online Fm


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

Tharsan Live Tube


இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும் 
THARSAN LIVE TUBE
Share/Bookmark பதிப்புரிமைTharsanLive